×

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு, சமூகத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேற்படி சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியத்தை ரூ.1,200/- ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பாக  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் 22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கீழ்க்கண்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 68,607 நபர்கள் (உழவர் பாதுகாப்புத் திட்டம் நீங்கலாக) மற்றும் ஏற்கெனவே பயன்பெற்று வரும் பயனாளிகளின் மாத ஓய்வூதியத்தை (மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் தவிர) ரூ.1,000/- லிருந்து ரூ.1,200/- ஆக ஆகஸ்ட், 2023 முதல் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது:-
வ.எண்.       திட்டங்களின் பெயர்
  1                  இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்
  2                  இந்திராகாந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம்
  3                  ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்
  4                  பெண்களுக்கான ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
  5                  50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
  6                  இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள்,
                      ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,) ஓய்வூதியத் திட்டம்
ஆகிய திட்டத்தின் கீழ் வழங்கபடும் ஓய்வூதியம் அதிகரிக்கபட்டுள்ளது.

The post சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அயலகத் தமிழர் நலவாரியத்தில்...